வேடசந்தூர்: அரசு ஆஸ்பத்திரி அருகே இரவு நேர டிபன் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்
வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரி அருகே கொட்டகை அமைத்து இரவு நேர டிபன் சென்டர் நடத்தி வருபவர் அலீமா பானு வயது 35. நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதிகாலை வந்த மர்ம நபர் ஒருவர் கொட்டகைக்கு தீ வைத்து விட்டு சென்று விட்டார். தீ கொழுந்து விட்டு எரிந்து உள்ளே இருந்த டேபிள் சேர் என 30 ஆயிரம் மதிப்புள்ள அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது. இதுகுறித்து அலீமாபானு வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தீ வைத்த மர்ம நபர் குறித்து வேடசந்தூர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.