சேலம்: யார் யார் எந்த பஸ்ஸில் சென்றாலும் கடைசியில் வெல்வது முதலமைச்சர் செல்லும் பிங்க் கலர் பஸ் தான்.. கருப்பூரில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
Salem, Salem | Sep 16, 2025 சேலம் கருப்பூர் அரசு பொறியல் கல்லூரி வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுவிற்கு அடையாள அட்டை மற்றும் வங்கிக் கடன் இணைப்பு விழா நடைபெற்றது இந்த விழாவில் பங்கேற்று பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் யார் யார் எந்தெந்த பஸ்ஸில் சென்றாலும் கடைசியில் செல்லும் பிங்க் கலர் பஸ்ஸில் வரும் முதலமைச்சர் தான் வெல்வார் என உறுதிப்படுத்த தெரிவித்தார்