பொன்னேரி: ஆண்டார்மடம் பகுதியில் தரைப்பாலம் உடைந்து வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்மடம் பகுதியில் கடல் நீர் உட்புகாதவாறு கட்டப்பட்டுள்ள தடுப்பணை அருகே காட்டூர் பழவேற்காடு சாலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் சேதமடைந்தது. . பிச்சாட்டூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் ஆரணியாற்றில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் தரைப்பாலத்தை முழுமையாக வெள்ள நீர் அடித்து சென்றதால் பொதுமக்கள் ஆற்றை கடக்க முடியாத சூழல் ஏற்பட்டது