ஆத்தூர்: சர்தார் வல்லபாய் பட்டேலின் 150ஆவது பிறந்த நாள் ஒற்றுமை பேரணியை சின்னாளபட்டியில் MP தொடங்கிவைத்தார்
Attur, Dindigul | Oct 31, 2025 சின்னாளபட்டியில் இந்திய அரசின் மேரா யுவபாரத் மூலம் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150 ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் விதமாக நடைபெற்ற ஒற்றுமை பேரணி நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், துணைவேந்தர் பஞ்சநதம் ஆகியோர் சர்தார் வல்லபாய் பட்டேல் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற ஒற்றுமை பேரணியில் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் கையில் தேசியக்கொடி ஏந்தியவாறு சென்றனர்