அம்பாசமுத்திரம்: மணிமுத்தாறு அருகில் பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான மாஞ்சோலை, காக்காச்சி ஊத்து, நாலுமூக்கு உள்ளிட்ட இடங்களில் தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.