இராமநாதபுரம்: சேதுபதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் தீ விபத்து
அச்சுந்தன் வயல் பகுதியில் செயல்பட்டு வரும் சேதுபதி அரசு கலைக் கல்லூரி மைதான வளாகப் பகுதியில் உள்ள காய்ந்த புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ள பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு கொழுந்துவிட்டு எரிந்து வருவதால் ராமநாதபுரம் தீயணைப்பு துறையினர் அதனை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.