காஞ்சிபுரம்: காந்தி சாலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் புத்தாடை வாங்கி சென்றனர்
காஞ்சிபுரத்தில் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளிபண்டிகையையொட்டி விற்பனை களைக்கட்ட துவங்கி உள்ளது. வீட்டு உபயோகப்பொருள்கள் மற்றும் புத்தாடைகள், பட்டாசுகளை பொதுமக்கள் குடும்பத்துடன் வருகை தந்து தங்களுக்கு தேவையான பொருட்களை மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமிரா வைக்கப்பட்டுள்ளது.