வேடசந்தூர்: எடப்பாடி பழனிச்சாமி வருகையை ஒட்டி திருவிழா கோலம் கொண்ட ஆத்துமேடு கரூர்ரோடு
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம், புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் வேடசந்தூரில் நாளை நடைபெற உள்ளது. இதனை அடுத்து வேடசந்தூர் தொகுதி அதிமுகவினர் போட்டி போட்டுக் கொண்டு அவரை வரவேற்க பிளக்ஸ் பேனர் வைத்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆத்து மேட்டில் இருந்து கரூர் செல்லும் சாலை திருவிழா கோலம் பூண்டு உள்ளது. பிளக்ஸ் வைக்க இடம் கிடைக்காமல் நிர்வாகிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. அதிமுக நிர்வாகிகள் உற்சாகத்துடன் உள்ளனர்.