மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அப்புராசபுதூரில் பழமை வாய்ந்த கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் கடந்த எட்டாம் தேதி கோவிலின் முன் கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே இருந்த மூன்றடி உயரமுள்ள ஐம்பொன்னால் செய்யப்பட்ட அம்மன் சிலை, மற்றும் பூஜை பொருட்களை திருடி சென்றனர். இது தொடர்பாக பூசாரி அளித்த புகாரின் அடிப்படையில் பொறையார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இரண்டு தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் குற்றவாளிகள