சிங்கம்புனரி: கட்டுக்குடிபட்டியில் மூன்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கில பாட ஆசிரியர் பணியிடை நீக்கம்-மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) உத்தரவு
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் அருகே கட்டுக்குடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்த ஆரோக்கியசாமி (51), 6, 7-ம் வகுப்பு மாணவிகள் மூவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பெற்றோர் புகாரின் பேரில், திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ வழக்கில் அவரைக் கைது செய்தனர். இதையடுத்து, முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) மாரிமுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.