திண்டுக்கல் கிழக்கு: 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வாலிபரை சாணார்பட்டி போலீசார் போக்சோவில் கைது செய்தனர்
சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கி குழந்தை பிறந்தது.இதுகுறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீசார் அதிகாரிபட்டியை சேர்ந்த பாண்டி என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்