நிலக்கோட்டை: கட்டகாமன் பட்டியில் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த முதியவர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டார்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கட்டகாமன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் கருப்பையா ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மேய்ச்சலுக்காக தனது ஆடுகளை அருகில் உள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு கொண்டு சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக 30 அடி ஆழமுள்ள அந்த கிணற்றுக்குள் கருப்பையா தவறி விழுந்தார். தீயணைப்பு வீரர்கள் வலை அமைத்து கிணற்றுக்குள் இருந்த கருப்பையாவை லாவகமாக உயிருடன் மீட்டனர்.