வேடசந்தூர்: சுள்ளெரும்பில் வீட்டில் நகைதிருடிய நபரை கைது செய்த டிஎஸ்பி அமைத்த தனிப்படை போலீஸ்சார்
சுள்ளெறும்பு நால்ரோடு பகுதியில் வசிப்பவர் பாலமுருகன் (வயது 45) கூலி தொழிலாளி. இவர் கடந்த 4-ம் தேதி அன்று வீட்டில் குடும்பத்தினர் இல்லாத நிலையில் மதிய நேரத்தில் கதவுகள் அனைத்தையும் திறந்து வைத்து ஒரு ரூமில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். மாலை தூங்கி எழுந்து பார்த்த பொழுது பக்கத்து ரூமில் இருந்த பீரோ திறந்து இருப்பதையும் துணிகள் தூக்கி வீசப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு பீரோவை சோதனையிட்ட பொழுது அதில் வைத்திருந்த 2 1/2 பவுன் நகை காணாமல் போய் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து பாலமுருகன் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.