வேடசந்தூர்: உசிலம்பட்டியில் தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த விவசாய தொழிலாளி
வேடசந்தூர் அருகே உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் மச்சக்காளை விவசாய தொழிலாளி. இவர் உசிலம்பட்டி பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் கம்பி வேலி அமைக்கும் பணிக்காக கல்தூண் ஊன்றும் பணியில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்து கொண்டு இருந்தார். அப்பொழுது சுமார் நான்கு அடி நீளம் உள்ள கட்டு விரியன் பாம்பு அவரது காலை கடித்துள்ளது. இதனால் மச்சக்காளை வலியால் துடித்து உள்ளார். இதனைப் பார்த்த சக தொழிலாளர்கள் பாம்பை பிடித்து கொண்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.