பேருந்து நிலையம் அருகே MGR சிலை பின்புறம் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் சாலையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது ஆய்வாளர் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர் ம.மு.கோவிலூர் அருகே உள்ள சக்கியம்பட்டியை சேர்ந்த திருப்பதி என்பது தெரியவந்தது