திண்டுக்கலில் இருந்து சாணார்பட்டி வழியாக கோபால்பட்டி,நத்தம், காரைக்குடி,சிவகங்கை ஆகிய பகுதிகளுக்கு ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கோபால்பட்டி அருகே உள்ள சென்டர் மீடியனில் அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் தொடர்ந்து மோதி விபத்துக்குள்ளானது. சோலார் மின்சக்தியில் இயங்கும் எச்சரிக்கை விளக்கு பொருத்தப்பட்ட கம்பம் அமைக்கப்பட்டது. வாகனங்கள் இடித்து சோலார் மின் கம்பம் சேதம்.