திருச்செந்தூர்: உடன்குடி அனல் மின் நிலையத்தில் வட மாநில தொழிலாளர்கள் போராட்டம்
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அர்ஜுன் பிரசாத் என்பவர் உடன்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் அப்பகுதியில் கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க கோரி வட மாநில தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் வேலைக்கு செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.