கள்ளக்குறிச்சி: பானையங்கால் கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற அதிசய விளக்கு திருவிழா
பானையங்காலில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னியம்மன், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ முத்து முனியப்பன் திருக்கோயில்களில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதிசய விளக்கு திருவிழா நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது.ஏராளமானோர் அலங்கரித்து கொண்டு வந்திருந்த அதிசய திருவிளக்குகள் கேரளா செண்டை மேளங்கள் மற்றும் தொடர் வான வேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு சென்றடைந்தனர்.