எழும்பூர்: சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் இளைஞர் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் தீடீர் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு
சென்னை, நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் இன்று விலை உயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. வாகனத்தின் இன்ஜின் பகுதியில் திடீரென கரும்புகை வெளியேறியதை கவனித்த ஓட்டுநர், வாகனத்தை நிறுத்தினார். சில நிமிடங்களில் வாகனம் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீவிபத்தால் ஸ்டெர்லிங் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.