திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் JM-1 நீதிமன்ற நீதிபதி அவர்கள், வழக்கறிஞரை கன்னியக் குறைவாகவும், மிரட்டி, அவமானப்படுத்தி, வழக்கறிஞரை ரிமாண்ட் செய்யுங்கள் என்று பேசியதை திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் மீண்டும் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் JM-1 நீதிமன்ற நீதிபதியை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் மற்றும் செயலாளர் இருவரும் தெரிவித்தனர்