ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது . தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான அணிகள் பங்கேற்றன. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் கலந்து கொண்டு பரிசு தொகை மற்றும் கோப்பைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.