சோளிங்கர்: கரிக்கல் பகுதியில் காணாமல் போன ஊராட்சி செயலாளர் கல்குவாரி குட்டையில் சடலமாக கண்டெடுப்பு-போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் கரிக்கல் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கரிக்கல் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் வெங்கடேசன் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்