வேடசந்தூர்: நகர் பகுதி முழுவதும் தீபாவளியை முன்னிட்டு குவிந்த கட்டுக்கடங்காத கூட்டம் வேடசந்தூர் போலீசார் பாதுகாப்பு
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி வேடசந்தூரில் ஜவுளிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்க ஏராளமானோர் குவிந்ததால் வேடசந்தூர் ஸ்தம்பித்தது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதுடன் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் அந்தந்த நாட்டில் தீபாவளி பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் வேடசந்தூரில் பொதுமக்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் குவிந்ததால் கடும் நெருக்கடி ஏற்பட்டது.