வாலாஜா: மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் 27 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக எஸ்.பி அலுவலகம் தகவல்
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி அய்மன் ஜமால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த பொது மக்கள் தங்களது பிரச்சனைகளை மனுக்களாக வழங்கினர். இன்று நடைபெற்ற குறை தீர்வு கூட்டத்தில் 27 மனுகள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது