ஆத்தூர்: முத்தம்பட்டி ஸ்ரீகாளியம்மன் கோவில் மஹாகும்பாபிஷேக விழா அமைச்சர் கோவில் கமிட்டியார்கள் உற்சாக வரவேற்பு
தொப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முத்தம்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் மகாகும்பாபிஷேகம் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நிறைவு செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபஆராதனை முடிந்தவுடன் விழாவிற்கு வருகை தந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு கோவில் கமிட்டியார்கள் மற்றும் ஒக்கலிக காப்பு இளைஞர் மஹாஜன சங்கத்தினர் மாலை மற்றும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.