வேப்பூர்: நல்லூர் வடக்கு ஒன்றிய பகுதிகளில் அமைச்சர் சி.வி.கணேசன் கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் அவர்களுக்கு ஆதரவாக நல்லூர் ஒன்றிய செயலாளர் பாவாடை, கோவிந்தசாமி ஏற்பாட்டில் அமைச்சர் சி.வி.கணேசன் வாக்கு சேகரித்தார். நல்லூர், சித்தூர், சாத்தியம், வண்ணாத்தூர், வேப்பூர், பூலாம்பாடி, நிராமணி உள்ளிட்ட 15 கிராமங்களில் கட்சியினர், கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.