ஆத்தூர் ஒன்றியம், சித்தரேவு ஊராட்சிக்குட்பட்ட நல்லாம்பிள்ளையில் ரூ. 32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கூட வகுப்பறைகள் திறப்புவிழா மற்றும் ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள சமுதாய கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் புதிய பள்ளி வகுப்பறைகளை திறந்துவிட்டு புதிய சமுதாய கூடத்திற்கான பூமி பூஜை பணிகளை துவக்கி வைத்தார் பின்னார் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு வழங்கினார்