சிங்கம்புனரி: கரிசல்பட்டியில் பட்டா மாறுதலுக்காக "இருவரும் ஒருவரே" சான்றிதழில் கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தை போட்ட கிராம உதவியாளர் சஸ்பெண்ட்
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் பெயரில் போலியாக 'இருவரும் ஒருவரே' சான்றிதழ் வழங்கப்பட்டது. இச்சான்றிதழை கிராம உதவியாளர் சின்னையா, முருகேசனின் கையெழுத்தைப் போட்டு வழங்கியது விசாரணையில் தெரிந்தது. இதன்மூலம் பொன்னமராவதியில் பத்திரப் பதிவு செய்யப்பட்டு,பட்டா மாறுதலுக்கு ஆவணங்கள் வந்தன.இதையடுத்து, வட்டாட்சியர் நாகநாதன் உத்தரவின்படி, சின்னையா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.