ஓமலூர்: காமலாபுரம் விமான நிலையத்தில் ராமதாஸ் கெடுவிற்கு நாளை பதில் அளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்
Omalur, Salem | Sep 3, 2025 தர்மபுரி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாமக தலைவர் அன்புமணி சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு இன்று வருகை புரிந்தார் அப்போது உங்கள் மீதான பதினாறு குற்றச்சாட்டுகளுக்கு வரும் பத்தாம் தேதிக்குள் பதில் அளிக்க இரண்டாவது முறையாக ராமதாஸ் கெடு விதித்தது குறித்து கேட்ட கேள்விக்கு நாளை பதில் தரப்படும் என தெரிவித்தார்