திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார். கலைஞர் கனவு இல்லத் திட்ட வீடு கட்டும் பணிகள், தார் சாலை, தரைப்பாலம் மற்றும் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமான பணிகளை அவர் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சாலை ஓரங்களில் 300 மரங்கள் நடும் நிகழ்வை அவர் தொடங்கி வைத்தார்.