சிங்கம்புனரி: சிங்கம்புணரி தீயணைப்பு நிலையம் முன்பு காவேரி கூட்டு குடிநீர் கசிவால் விறகுகள் அழுகி துர்நாற்றம் வீசும் அவலம்-நாற்றம் அடிப்பதால் மண்ணை கொட்டிய வீரர்கள்
சிங்கம்புணரி தீயணைப்பு நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விறகு குவியலால் ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளது. காவேரி கூட்டு குடிநீர் கசிவால் விறகுகள் அழுகி, துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் பரவி, தீயணைப்பு வீரர்களுக்கு நோய் தொற்று அபாயம் உள்ளது. மண்ணை கொட்டி மூடியும் துர்நாற்றம் தொடர்கிறது. ஆக்கிரமிப்பு விறகுகளை அகற்றி, கசிவை சரிசெய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.