சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் உடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுவதை ஒட்டி பங்கேற்பவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனைகள் நடைபெறுவதாக தெரிவித்தனர்.