ஆத்தூர்: விவசாயிகளுக்கு முறையாக நீர் ஆதாரம் செல்லவில்லை என்றால் நானே களத்தில் இறங்கி போராடுவேன் ஆத்தூரில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
Attur, Dindigul | Sep 27, 2025 பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரிமையை மீட்க தமிழகத்தை காக்க நடை பயணத்திற்கு திண்டுக்கல் வருகை தந்த அவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு வருகிறார் இதை அடுத்து குடகனாற்றை மீட்டெடுக்க பாசன விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் திண்டுக்கல் ஆத்தூர் காமராஜர் அணை அருகே உள்ள ராஜ வாய்க்கால் பகுதியை பார்வையிட்டார் தொடர்ந்து அங்கு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்