திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மேற்கு ஒன்றியம், ஆத்தூர் ஊராட்சி, பழைய செம்பட்டியில் நடைபெற்ற புதிய நியாயவிலைக் கடைத்திறப்பு விழாவிற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் இராகவ்பாலஜி தலைமை தாங்கினார். புதிய நியாயவிலைக் கடையை திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கிய பின்பு அவர்கள் மத்தியில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள். தமிழகத்தில்தான் ரேஷன் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கும் நிலைமை உருவாகியுள்ளது என்றார்.