வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரத்தில் வேடசந்தூரை நோக்கி இரண்டு இரு சக்கர வாகனங்கள் வந்து கொண்டிருந்தது. அதில் முன்னாள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விட்டு சாலையோரம் இருந்த கல்தூனில் மோதியது. இதில் இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். இருவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். படுகாயம் அடைந்த இரண்டு இளைஞர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை.