பூவிருந்தவல்லி: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதல் சுத்திகரிப்பு குடிநீர் விநியோக திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.
சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 1180 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் ரூபாய் 66 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் செம்பரம்பாக்கம் கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் தண்ணீரை குடிநீராக சுத்தகரிப்பு செய்து விநியோகம் செய்யும் திட்டம் அரசு சார்பில் முடிக்கப்பட்டது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் பார்வையிட்டு திறந்து வைத்தார்.