பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 7ஆம் தேதி திண்டுக்கல்லிற்கு வருகை தர உள்ளார். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே உள்ள மைதானத்தில் மேடைகள் அமைக்கும் பணிவானது நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிடுவதற்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வருகை தந்தார்.