திண்டுக்கல் கிழக்கு: செவாலியே சிவாஜி நகரில் அமைச்சர் ஐ பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டில் GST அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி மகள் இந்திரா செவாலியர் சிவாஜி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் இவர் வத்தலக்குண்டு அருகே உள்ள கெய்ன்அப் என்ற நூற்பாலையில் பங்குதாரராக இருந்தவர். வெள்ளிக்கிழமை நண்பகல் கோவையில் இருந்து வந்த சரக்கு மற்றும் சேவை வரித்துறை நுண்ணறிவு அதிகாரிகள் 4 பேர் இந்திரா வீடு மற்றும் வத்தலக்குண்டு பகுதியில் செயல்பட்டு வரும் நூற்பாலையில் சோதனை நடத்தினர் அதிகாரி சோதனையை நிறைவு செய்து சில ஆவணங்களை கொண்டு சென்றனர்