செம்பட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களில் நள்ளிரவில் தொடர்ந்து விலை உயர்ந்த, இருசக்கர வாகனங்களை திருடும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செம்பட்டி பகுதியில் விலை உயர்ந்த பல்சர் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து இரவு நேரங்களில் திருடப்பட்டு வருவது குறித்து அன்பு மற்றும் நவீன் ஆகியோர் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.