கிருஷ்ணகிரி: ஆவின் மேம்பாலம் அருகில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் மற்றும் கூடுதல் கால்வாய்கள் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
ஆவின் மேம்பாலம் அருகில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் மற்றும் கூடுதல் கால்வாய்கள் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.கிருஷ்ணகிரிநகராட்சி, ஆவின் மேம்பாலம் அருகில் உள்ள டி.சி.ஆர். ஜங்சன் பேருந்து நிறுத்தம் அருகில், நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக, மழை நீர் தேங்கியுள்ளதையடுத்து மழை நீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது