துறையூர்: பொன்னம்பலம்பட்டி கிராம பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை
பொன்னம்பலம்பட்டி கிராமத்தில் ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப்படவில்லை. பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனை கண்டித்து பொன்னம்பலம்பட்டி கிராம பொதுமக்கள் காலி குடங்களுடன் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.