திண்டுக்கல் மேற்கு: நிவாரணம், பாதுகாப்பு கேட்டு மாமனாரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ராமச்சந்திரன் மனைவி ஆட்சியரிடம் மனு
ஆட்சியர் அலுவலகத்தில் நிலக்கோட்டை அருகே கூட்டாத்து அய்யம்பாளையம் பகுதியில் மாமனாரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ராமச்சந்திரன் மனைவி ஆர்த்தி எனது கணவர் கொலையில் மேலும் சிலர் ஈடுபட்டு இருப்பதாக சந்தேகம் இருப்பதாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும் எனக்கும் எனது கணவர் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்குமாறும், எனது கணவர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குமாறும் மனு அளித்தனர்