கடலூர்: திருப்பாதிரிப்புலியூரில் பேருந்து நிலைய கழிவறை கழிவுகளை கால்வாயில் விடுவதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பூ தூவி நூதன போராட்டம்
கடலூர் மாநகரப் பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறையில் இருந்து வெளியேற்றப்படும் மலம் மற்றும் சிறுநீர் நேரடியாக லாரன்ஸ் ரோட்டில் உள்ள கழிவு நீர் கால்வாயில் விடப்படுகிறது. மலமும் புழுக்களும் ரோட்டில் மிதக்கிறது. இதனால் பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் நோய் தொற்றும் ஆபத்து இருக்கிறது. மேலும் கடலூர் மாநகரத்தில் ஆங்காங்கே பாதாள சாக்கடை உடைப்பெடுத்து வீதிகளில் பாய்ந்து நாற்றம் அடிக்கிறது. பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறை