கரூர்: உப்பிடமங்கலம் கடைவீதியில் உள்ள இந்தியா கூட்டணி தேர்தல் பணிமனையில் மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி பங்கேற்பு
Karur, Karur | Apr 3, 2024 கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் உப்பிடமங்கலம் கடைவீதியில் உள்ள இந்தியா கூட்டணி தேர்தல் பணிமணையில் ஏப்ரல் 2ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி கலந்து கொண்டு, இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணியை கை சின்னத்தில், அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென ஆலோசனை வழங்கினார்