வேடசந்தூர்: அமைதி கல்வியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்
விட்டல் நாயக்கன்பட்டியில் செயல்படும் அமைதி கல்வியியல் கல்லூரியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை அமைதி கல்வியல் கல்லூரி இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைதி கல்வியியல் கல்லூரி தாளாளரும் அமைதி அறக்கட்டளையின் தலைவருமான ரூப பாலன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் கலந்துகொண்டு மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மண்டல வன பாதுகாவலர் முகமதுஷபாப், அமைதி தொழிற்கல்வி முதல்வர் மெர்சி பாஸ்கர் ஆகியோர் முன்னிலை.