ஆவடி: நெற்குன்றத்தில் சாலையை சீரமைக்க கோரி பேட்டி அளித்திருந்த போதே அதிமுக கவுன்சிலர் கைது
சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதியில் உள்ள என் டி பட்டேல் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக, சேரும் சகதியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி அதிமுக கவுன்சிலர் சத்யநாதன் தலைமையில் போராட்டம் மேற்கொண்டனர். அப்போது கவுன்சிலர் செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்த போதே போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.