நத்தம்: கொசவபட்டியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கொசவபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளைச் செயலாளர் அலெக்சிஸ் மரியதாஸ் தலைமை தாங்கினார். இதில் கொசவபட்டியில் அரசு கால்நடை மருத்துவமனை அமைக்கவும், கொசவபட்டி, குறிஞ்சிப்பட்டி இடையே தார்சாலையை சீரமைக்கவும், மேலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.