திண்டுக்கல் கல்லறைமேடு ஜங்ஷன் அருகே கடந்த 7-ம் தேதி வெற்றிவேல் என்பவரின் இலை கடையின் பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரம் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது, உத்தனம்பட்டி பிரிவு அருகே ஜெய்லானி என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள், லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குமாரபாளையம் பகுதியை சேர்ந்த வீரமணி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்