திருவொற்றியூர்: மணலி மண்டல அலுவலகத்தில் மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்எல்ஏக்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மணலி மண்டல அலுவலகத்தில் மண்டலகுழு தலைவர் ஏ வி ஆறுமுகம் தலைமையில் மழைக்கால முன்னெச்சரிக்கைகள் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறுவற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் அனைத்து மக்களுக்கான அரசாக திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும் கட்சி பாகுபாடு இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அனைத்து துறைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்