திண்டுக்கல்லில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. போராட்டத்திற்கு, கிழக்கு ஒன்றிய தலைவர் கணேசன், தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜெயந்தி கோரிக்கை விளக்க உரை நிகழ்த்தினார்.